பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவு போலீஸ் விழிப்புணர்வு

Added : மார் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கோமங்கலம்புதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கோலார்பட்டி, நம்பியமுத்துார் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஆட்டோக்களில் சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.எஸ்.ஐ., மணிமாறன் பேசுகையில், ''தமிழக அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், தேவையின்றி கூட்டமாக யாரும் வெளியே வரக்கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி., தலைமையில், பொள்ளாச்சி, வால்பாறை டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர், 45 எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட, 375 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X