பொது செய்தி

தமிழ்நாடு

'செக்போஸ்ட்'களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தணும்! அனைத்து துறையினருக்கு சப் - கலெக்டர் உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;''பொள்ளாச்சி சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும்; வாகனங்களை அனுமதிக்கக் கூடாது,'' என, போலீசாருக்கு சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணியாக, வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.சப் - கலெக்டர் வைத்திநாதன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, கேரளா மாநில சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. கேரளா மாநில பஸ்கள், வாகனங்கள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்துள்ள, கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.போலீஸ், கால்நடைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த சப் - கலெக்டர், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 'சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தபட வேண்டும்,' என, உத்தரவிட்டார்.வாகனங்கள் சிக்கினமீனாட்சிபுரம் ரயில்வே கேட்டை தாண்டிச் சென்று பயணிகளை ஏற்றியது குறித்து, 'செந்துார்' என்ற தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சப் - கலெக்டர் தெரிவித்தார். இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆய்வு செய்தார்.வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ''மாநில எல்லையை தாண்டக்கூடாது என்ற அறிவிப்பை தாண்டி சென்றதால், அந்த பஸ் உரிமையாளரிடம் விசாரணை செய்யப்பட்டு ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.கோவிந்தாபுரம் - வளந்தாயபுரம் பகுதியில், கேரளா மாநில பதிவெண் கொண்ட ஆட்டோ உள்ளிட்ட நான்கு வாகனங்களில், பயணிகளை அழைத்துச் சென்றதற்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் ஓட்டியது; பரிசோதனை செய்யாமல் பயணிகளை அழைத்து வந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டுகோள்!சப் - கலெக்டர் கூறுகை யில், ''தமிழக அரசு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கூட்டமாக சென்று பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் கூட்டமாக கூட வேண்டாம். அதிக பணியாளர்கள் வழங்க கூடிய கடைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X