பொது செய்தி

தமிழ்நாடு

'சில்லிங்' விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை தேவை

Added : மார் 25, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மது 'சில்லிங்' விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடு முழுவதிலும் கடந்த, 22ம் தேதி சுய ஊடரங்கு கடைபிடிக்கப்பட்டது. அன்று, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் சுய ஊரடங்கு அன்று, வழக்கம் போல அதிக அளவிலான இடங்களில், 'சில்லிங்' மது விற்பனை அமோகமாக நடந்தது. குவாட்டருக்கு, 75 முதல், 100 ரூபாய் வரையில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது.கோட்டூர் அடுத்த நா.மூ.சுங்கம் டாஸ்மாக் பின்பக்கம், கோட்டூர் - ஆழியாறு ரோட்டிலுள்ள டாஸ்மாக் கடை, துரையூர் மேடு அருகேயுள்ள டாஸ்மாக் கடை, அங்கலக்குறிச்சி டாஸ்மாக் கடைகளில் 'சில்லிங்' விற்பனை அமோகமாக நடந்தது. அதேபோல், அய்யாமடை பிரிவு பகுதி டாஸ்மாக் கடை, இந்திரா நகர் அருகே பி.ஏ.பி., கால்வாய் அருகிலும், அழுக்குசுவாமி கோவில் அருகிலும் சில்லிங் மது விற்பனை நடந்தது.இந்நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 'சில்லிங் பாயின்ட்'களில் விற்பனை நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு, அனைத்து பகுதிகளிலும் 'சில்லிங்' விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X