உருக்குலைந்த தார் ரோடு| Dinamalar

உருக்குலைந்த தார் ரோடு

Added : மார் 25, 2020
Share

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மயானத்தில் இருந்து, கதர் பண்ணை செல்லும் தார்ரோடு இரண்டு கி.மீ., துாரம், கிராம இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இப்பகுதியில், விவசாய தோட்டங்கள் அதிகளவில் உள்ளது. ரோடு வழியாக லாரி போக்குவரத்து அதிகமாக இருந்ததால், தார்ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.இவ்வழியாக வரும் லாரி, டெம்போ, கார் போன்ற வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் புதர் மண்டியுள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.இந்த ரோட்டை புதுப்பிக்கும் முன், குண்டும் குழியுமான இடங்களில் 'பேட்ச் ஒர்க்' செய்யவும், புதர்களை அகற்றவும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X