பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் வெளியே வராதீங்க! சுகாதாரம், வருவாய்த்துறை விழிப்புணர்வு

Added : மார் 25, 2020
Share
Advertisement
  வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் வெளியே வராதீங்க! சுகாதாரம், வருவாய்த்துறை விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், வெளிநாடு சென்று வந்தவர்களில், 28 பேர் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே வரவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 'கொரோனா' தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் கைகழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், அரசு உத்தரவுப்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களது வீடுகள், தனிமைப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி நகரில் ஒன்பது வீடுகள், மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஐந்து வீடுகள் என, மொத்தம், 14 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.ஆனைமலை தாலுகாவில், ஆனைமலை, வேடசந்துார், பெத்தநாயக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், 14 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.வருவாய்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளை கண்டறிந்து, 'கொரோனா தொற்று உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படுகிறது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்களிடம், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், தொடர்பான விபரங்களை, தாசில்தாருக்கு, 94450 00576 (பொள்ளாச்சி); 94421 45332 (ஆனைமலை) என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்,' என்றனர்.பொள்ளாச்சி தெற்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் (கஞ்சம்பட்டி) மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ''கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.வெளிநாடு சென்று வந்தவர்களது வீடுகள், 14 முதல், 28 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.ஒன்றிய நிர்வாகம் 'அலர்ட்!'பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியில், வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய நான்கு பேரின் வீடுகள், காந்தி நகர், பாஸ்கர் நகர், நெசவாளர் காலனி, உடையார் வீதி ஆகிய குடியிருப்பு பகுதிகளில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, குடும்ப உறுப்பினர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்போரை கண்காணிக்க, ஒன்றியம் சார்பில், இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சி முழுக்க கண்காணிப்பு, துாய்மைப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சாக்கடைகள் துார்வாருதல், குளோரினேஷன், குப்பைகளை அகற்றுதல் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X