பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், 'கொரோனா' தடுப்பு பணிக்காக, துாய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கை கழுவும் திட்டம் குறித்து விழிப்புணர்வு, பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், தர்மராஜ், சீனிவாசன், ஜெயபார்வதி, விஜய்ஆனந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு பணிக்காக, 24 பேருக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கால்உறை, கண்ணாடி மற்றும் உடைகளும் வழங்கப்பட்டுள்ளன.'
கிருமி நாசினி தெளிப்பதற்காக, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பிரஷர் இயந்திரம், இரண்டு பவர் ஸ்பிரே இயந்திரம், 20 ஹேண்ட் ஸ்பிரே வாங்கப்பட்டுள்ளன. இவை தற்போது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட், கோவில்கள், அரசு அலுவலகங்கள், கோர்ட், நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட பகுதிகள், குடிசை மாற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதற்காக உபகரணங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள், துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X