பொது செய்தி

தமிழ்நாடு

'லிப்ட்' நடைமேம்பால பணி முடக்கம்! 'கொரோனா' வைரஸ் பரவுவதால் பாதிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 'லிப்ட்' நடைமேம்பால பணி முடக்கம்! 'கொரோனா' வைரஸ் பரவுவதால் பாதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தேசிய நெடுஞ்சலையை பாதுகாப்பாக கடக்க அமைக்கப்படும், 'லிப்ட்' வசதியுடன் கூடிய, நடைமேம்பால பணிகள், 'கொரோனா' பிரச்னையால் முடங்கியுள்ளது.பொள்ளாச்சி -- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான, 4.5 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டது.விரிவாக்கப்பட்ட பகுதியில், இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோடுகள், துத்தநாக தகடுகளால், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டன.இந்த பணிகள் நிறைவடைந்த பின், ரோட்டை கடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பி.ஏ.பி., அலுவலகம் அருகே, கோவில், தனியார் கல்லுாரி அமைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.
இதற்கு தீர்வாக, ரோட்டை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை தீர்மானித்தது. இந்த மேம்பாலத்தில் வழக்கமான படிக்கட்டுகளுடன், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக, 'லிப்ட்' வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த பாலத்தின் திட்ட மதிப்பு, 1.67 கோடி ரூபாயாகும்.பாலம் அமைக்கும் பணி, 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில், வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.இந்நிலையில், எதிர்பாராத விதமாக 'கொரோனா' தாக்கம் ஏற்பட்டு, நாடு முழுக்க இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பொள்ளாச்சியிலும், வழக்கமான பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அவற்றுள் ஒன்றாக, இந்த 'லிப்ட்' நடைமேம்பால பணியும் முடங்கியுள்ளது.இயல்பு நிலை திரும்பிய பின், ஓரிரு மாத அவகாசத்தில் பணிகள் முடிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X