பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் கட்டுப்பாடு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கம்பம் : அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தவிர மற்ற சிகிச்சைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தும்மல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முன்னுரிமை தந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

'கொரோனா 'வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்களில் சிகிச்சைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், தும்மல், மூச்சு விடுவதில் சிரமம் என்று வருபவர்களுக்கு முன்னுரிமை தந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. பிரசவங்கள் அனுமதிக்கப்படுகிறது.

தோல் அரிப்பு, மூட்டுவலி, கை கால் வலி என சாதாரண மற்ற உடல் உபாதைகளுக்கு சிகிச்சையளிப்பதை தவிர்க்கவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிகிச்சைக்கு வருபவருடன் வரும் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உயரதிகாரிகள் உத்தரவில் கம்பம் அரசு மருத்துவமனை மெயின்கேட்டில் தடுப்பு கம்பு அமைக்கப்பட்டு காவலாளி நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களை, நோயாளிகளை தொட்டு சிகிச்சையளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், கொரோனாதாக்கம் தொடர்பான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மற்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிப்பதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X