ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் ரூ.2,000 நிவாரணம்

Added : மார் 25, 2020
Share
Advertisement


புதுச்சேரி :''கொரோனா நிவாரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்,'' என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
அவரது பேட்டி:
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட, கொரோனா தொற்று நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திட மத்திய அரசு வழங்கி வரும் அனைத்து பரிந்துரைகளையும் முறையாக நிறைவேற்றி வருகிறோம். மேலும், மாநில அரசு சார்பில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். மக்கள் நடமாடும் பகுதிகளை கண்டறிந்து, அதனை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த 22ம் தேதி புதுச்சேரி மாநில மக்கள் அமைதி காத்து, வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளித்தனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் முடங்கி இருந்தது.
மாநிலத்தில் கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொரோனா நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, மாநில அரசின் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள, 3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும், தலா, 2,000 ரூபாய் நிவாரணம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கான, நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X