பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கம்பம் : 'கொரோனா' தடுப்புக்காக கிராமங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், தும்மல், மூச்சுத்திணறல் உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் கிராம செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் வீடு வீடாக சென்று, காய்ச்சல், தும்மல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிய சுகாதார பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோம்பை மற்றும் கூடலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கூடுதல் சுகாதார நிலையங்கள் உள்ளன.இவற்றின் கீழ் உள்ள கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி, வாய்க்காப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பணியாற்றும் கிராம செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணியில் இறங்கியுள்ளனர்.

யாருக்காவது காய்ச்சல், மூச்சுத்திணறல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாரித்தபோது, 'கொரோனா' தடுப்பாக கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பற்றியும் கண்காணித்து வருகின்றோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X