சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு நடவடிக்கை கடலூரில் 35 கைதிகளுக்கு ஜாமின்

Added : மார் 25, 2020
Share
Advertisement



கடலுார் :கடலுார் மத்திய சிறையில், 'கொரோனா' நோய் பரவுவதை தடுக்கும் வகையில் 35 விசாரணை கைதிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 'கொரோனா' நோயை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நேற்று மாலை முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 'கொரோனாவில்' இருந்து சிறைக் கைதிகளை காப்பாற்றும் வகையில், அவர்களை பரோலில் விடுவிக்கலாம் அல்லது ஜாமின் வழங்கலாம். இதற்கு, தகுதியான கைதிகளை கண்டறிய உயர்மட்ட குழு அமைத்து முடிவு செய்ய வேண்டுமன, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக சிறைகளில் கைதிகள் நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கடலுார் மத்திய சிறையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 710 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், விசாரணை கைதிகள் 210 பேர் ஆவர். விசாரணை கைதிகளில் தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட 35 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X