பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தல் பட்டியலில் இடுக்கி; கண்டிப்பாக இருக்க உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கம்பம் : மத்திய அரசு அறிவித்துள்ள ஐசலோசன்(தனிமைப்படுத்தல்) பட்டியலில் கேரளா, இடுக்கி மாவட்டம் இடம் பெற்றுள்ளதால் கம்பமெட்டு, குமுளி மற்றும் போடிமெட்டு சோதனை சாவடிகளில் கண்டிப்புடன் இருக்க அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் அதிகம் உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஐசலோசன் பட்டியலில் 75 மாவட்டங்கள் இடம் பெற்றன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்ளன. கேரளாவில் 20 மாவட்டங்களில் இடுக்கி மாவட்டமும் உள்ளது. இது தமிழகத்தில் தேனி மாவட்டத்துடன் இணைகிறது.

குறிப்பாக குமுளி, கம்பமெட்டு மற்றும் போடிமெட்டு ஆகிய பாதைகள் வழியாக இடுக்கி செல்லலாம். இம் மாவட்டத்தில் உள்ள 1.5 லட்சம் ஏக்கர் ஏலத்தோட்டங்களில் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் உள்ளது. அதேபோல தோட்ட தொழிலாளர்களும் கம்பம் பகுதியிலிருந்து தான் செல்வர்

.கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசு உத்தரவுப்படி எல்லைகள் மூடப்பட்டன. அதற்கு முன்பே சுகாதாரத்துறையினர் மூன்று பாதைகளிலும் முகாமிட்டு சோதனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இடுக்கி ஐசலோசன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், சோதனை சாவடிகளில் கண்டிப்பு, கூடுதல் கண்காணிப்புடன் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பால், மருந்து பொருள்கள் தமிழகத்திற்குள்அனுமதிக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் வருபவர்களையும், முழுமையாக பரிசோதித்து அனுமதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X