பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் செய்ய தயங்கும் வியாபாரிகள்; பறிக்காமல் விடப்படும் திராட்சை

Added : மார் 25, 2020
Share
Advertisement

கம்பம் : கொரோனா எதிரொலியாக வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயங்குவதால் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை பழங்கள் பறிக்காமல் விடப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் பல கிராமங்களில் திராட்சையே பிரதான விவசாயமாகும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை மஹாராஷ்டிரா விதையில்லா திராட்சை வரத்து இருப்பதால், கம்பம் திராட்சைக்கு விலை கிடைக்காது. தற்போது மஹாராஷ்டிரா வரத்து நிற்கப் போகும் காலகட்டமாகும்.இப்போது கம்பம் பன்னீர் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் எதிர்பாராதவிதமாக 'கொரோனா 'வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திராட்சை வியாபாரிகள், பழம் கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

தோட்டங்களில் பழங்கள் பறிக்காமல் விடப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.சுருளிப்பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், தற்போது நல்ல விலை கிடைக்க வேண்டிய சமயம். ஆனால் கொரோனா பாதிப்பு எனவியாபாரிகள் கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். மிகவும் குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.

கேரளாவிற்கு முழுமையாக பழம் செல்லவில்லை. மதுரை, திருச்சி மார்க்கெட்டுகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. நல்ல விலை கிடைக்க வேண்டிய நேரத்தில், விவசாயிளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றார். தற்போது கிலோ ரூ. 25 தான் கிடைக்கிறது. கோடைகாலம் ஆரம்பித்திருப்பதால், இப்போது நார்மல் சீசன் என்றால் கிலோவிற்கு ரூ. 50க்கு மேல் கிடைக்கும் என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X