மார்க்கெட்டில் காய்கறிகள் விலை... உயர்வு! ஆண்டிபட்டி பொதுமக்கள் பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

மார்க்கெட்டில் காய்கறிகள் விலை... உயர்வு! ஆண்டிபட்டி பொதுமக்கள் பாதிப்பு

Added : மார் 25, 2020
Share
ஆண்டிபட்டி : 144 தடை உத்தரவை காரணம் காட்டி ஆண்டிபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் அவற்றின் விலையை திடீரென்று உயர்த்தியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். அரசின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட தேவைக்கான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இன்றி

ஆண்டிபட்டி : 144 தடை உத்தரவை காரணம் காட்டி ஆண்டிபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் அவற்றின் விலையை திடீரென்று உயர்த்தியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

அரசின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட தேவைக்கான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்களின் விலையை நேற்று வியாபாரிகள் திடீரென்று உயர்த்தி விட்டனர். நேற்று முன்தினம் கிலோ ரூ.50 ஆக இருந்த சின்னவெங்காயம் நேற்று காலை விலை உயர்த்தப்பட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. கத்தரி ரூ.40ல் இருந்து ரூ.80 ஆகவும், ரூ.10 முதல் ரூ.15 வரை இருந்த தேங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும் விலை உயர்த்தி விற்றனர்.

144 தடை உத்தரவு காரணத்தைக்கூறி அனைத்து காய்களின் விலையை வியாபாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தியதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் வராததால் இரு நாட்களுக்கு முன் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை இருந்த மல்லிகை பூக்கள் நேற்று கிலோ ரூ.100 ஆக குறைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X