பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் உழவர் சந்தையில் குவிந்த மக்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க நேற்று காலை ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால், கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

கம்பம் உழவர் சந்தையில் வழக்கமாக 40 டன் காய்கறி வரத்து இருக்கும். 105 வியாபாரிகள் விற்பனை செய்வர். கேரளாவை சேர்ந்த வியாபாரிகள், கம்பம் பகுதியை சேர்ந்தவர்களும் காய்கறி வாங்க வருவர். மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. மறுநாள் மிகவும் குறைவாக காய்கறி வந்தது. பொதுமக்களும் வரவில்லை. இதனால் காய்கறிகளும் விற்பனையாகவில்லை.

இந்நிலையில் 'கொரோனா' தடுப்புக்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவால் இன்று (மார்ச் 25) முதல் காய்கறிகள் கிடைக்காது என்று வதந்தி பரவியது. எனவே நேற்று காலை கம்பம் உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஆயிரக்கணக்கில் திரண்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

காலை 9:00 மணிக்கே 51 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தது. இதுபோன்ற கூட்டங்களில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. எனவே உழவர் சந்தைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X