அரசியல் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் தி.மு.க., முக கவசம் வழங்கல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தி.மு.க.,வினர் ஆயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட தி.மு.க., சார்பில் 1000 பேருக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது.தி.மு.க., மாவட்ட செயலர் அங்கையற்கண்ணி தலைமையில் உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய விளம்பர பிரசுரங்கள் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கென்னடி, துணைச் செயலர் காமராஜ், மருத்துவரணி இளங்கோவன், சுரேந்தர், இளைஞரணி தாகப்பிள்ளை, மாணவரணி அருண் பிரசாந்த், விவசாய அணி ஆறுமுகம், அசோகன், வர்த்தக அணி கிரிராசு தகவல் தொழில்நுட்ப அணி பிரகாஷ், ஒன்றிய செயலர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், நகர துணை செயலர் அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள் அன்புமணி மாறன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோன்று, கள்ளக் குறிச்சியில் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர் சங்கத்தினர் அரசு அலுவலக பணியாளர்கள், பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள், கையுறைகள் வழங்கினர். சங்க நிர்வாகிகள் ராஜசேகரன், தர்மசிங், விஜயகுமார், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X