பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் தட்டுப்பாடு மருத்துவமனைகளில் அறிவுரை

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை : அரசு மருத்துவமனைகளில், முக கவசங்கள், 'சானிடைசர்' தட்டுப்பாடு நிலவுவதால், டாக்டர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும், அவற்றை சொந்தமாக வாங்கி கொள்ளும்படி, மருத்துவமனை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது, 'கொரோனா' பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், முதுநிலை மருத்துவ மாணவர்களும், சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், 2,000க்கு மேற்பட்ட படுக்கைகளுடன், தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மருத்துவமனைகளில், தனி வார்டில் பணியாற்றுவர்களுக்கு மட்டுமே, முக கவசம், சானிடைசர் என்ற கை கழுவும் திரவம், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், மருத்துவமனைகளில் பிற பிரிவுகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, முக கவசம், சானிடைசர்களோ வழங்கப்படுவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் அறிவிப்பு பலகையில், சுற்றறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'முக கவசம், சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவமனைகளில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், அவற்றை சொந்தமாக வாங்கி கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X