பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பாய் உங்கள் கைகளில், 'தினமலர்!' .

Added : மார் 25, 2020
Share
Advertisement

கொரோனாவின் கொடூரம் குறித்து வாசகர்கள் விழிப்புணர்வு பெற, நோய் பரவாமல் தடுக்க, 'தினமலர்' நாளிதழ், கட்டுரைகள், செய்திகள், படங்கள் வெளியிடுவதை அறிவீர்கள். ஆபத்தான களத்தில், மிகவும் பாதுகாப்பாக இருந்து வதந்திகளை விரட்டி, நம்பகமான செய்திகளை தருகிறது, நமது நிருபர் குழு.
கொரோனாவை எதிர்த்து போராடுவது குறித்து வாசகர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை தரும், 'தினமலர்' நாளிதழ், பலத்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அச்சாகி, பாதுகாப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
நாளிதழ் அச்சாவதற்கான காகிதத்தை, இயந்திரத்தில் ஏற்றுவது முதல், கட்டு போடுதல் வரை அனைத்துமே, மனித கைப்படுதல் இன்றி, தானியங்கியாக நடக்கிறது!
அதோடு கூட, வாசகர்களின் நலன் கருதி, தற்போது, கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது. நாளிதழை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வெளியேறும் போதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
எனவே உங்கள் கைகளில் நாளிதழைக் கொடுக்கும் நபரும், கையுறை அணிந்திருப்பார். எனவே, முற்றிலும் சுகாதாரமான வகையிலேயே நாளிதழ் உங்களுக்குத் தரப்படுகிறது. வீண் வதந்திகளை புறந்தள்ளுவோம்; வீட்டில் தனித்திருந்து, கொரோனாவை வெல்வோம்!-வெளியீட்டாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X