பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலையில் அரவை நடக்குமா? விவசாயிகள் குழப்பம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : கொரோனா பரவுவதை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்க்க ஆலையில் அரவை நடக்குமா என விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுகிறது. இதன்படி ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூட கூடாது.மீறினால் கைது செய்யப்படுவார்கள்.நெல்லிக்குப்பம் இ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நடப்பதால் தினமும் 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மாட்டு வண்டிகளில் கரும்பு ஏற்றி வருகின்றனர்.

இவர்கள் அங்கு கூட்டமாக சேருவதை தடுக்க வேண்டும்.இன்று மாலை முதல் கரும்பு அரவை நடக்குமா என தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். பல விவசாயிகள் தாங்களாகவே கரும்பு வெட்டுவதை நிறுத்தியுள்ளனர்.சிலர் மட்டும் தொடர்ந்து கரும்புவெட்டி வருகின்றனர். ஆலை நிர்வாகம் உடனடியாக விவசாயிகளின் குழப்பத்தை தீர்ப்பதுநல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X