பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் 144 தடை உத்தரவு அமல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

மூணாறு : 'கொரோனா' தடுப்புக்காக தேவிகுளம் தாலுகாவில் மூணாறு உட்பட நான்கு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா பகுதியும், தேயிலைத் தோட்ட பகுதியுமான மூணாறில் 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.மூணாறில் தங்கிய பிரிட்டனைச் சேர்ந்த ஐந்து சுற்றுலா பயணிகளுக்கு 'கொரோனா' வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பல்வேறு பகுதிகளில் நடமாடியதாக தெரியவந்தது.

அதனால் சமூகத்தினரிடையே நோய் தொற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தி போதிலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வாகனங்களிலும், பொது இடங்களிலும் கூட்டமாக காணப்பட்டனர்.இது சமூக தொற்றுக்கு வழி வகுக்கும் என தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம்கிருஷ்ணன் ,மாவட்ட கலெக்டர் தினேசனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.தடை : அதன்படி தேவிகுளம் தாலுகாவில் மூணாறு, கே.டி.எச்., பள்ளிவாசல்,குஞ்சுதண்ணி ஆகிய கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதனை அறிந்தும் நேற்று மூணாறில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதனை தவிர்க்குமாறு போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற கடைகளை போலீசார் மூடினர்.வழக்குப்பதிவு: தடை உத்தரவை மீறி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ், 3 ஜீப்புகள்,3 ஆட்டோக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கட்டுப்பாட்டை மீறிய ஆட்டோக்களை மூணாறு எஸ்.ஐ., சந்தோஷ் விரட்டினார்.

பகல் 2:00 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் குறைந்தது.மூணாறு அருகே டாடா கம்பெனிக்குச் சொந்தமான ஐ.டி.டி., தேயிலை தொழிற்சாலை மற்றும் பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் உள்ள பேக்கட்டிங் சென்டர்' மூடப்பட்டன.

போலீஸ் அணிவகுப்பு:

மூணாறில் 144 தடை உத்தரவை மீறும் வகையிலான செயலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.தடை உத்தரவை விளக்கும் வகையில்மூணாறு டி.எஸ்.பி., ரமேஷ்குமார் தலைமையில் போலீஸ் அணி வகுப்பு நடந் தது. போலீஸ் தகவல் மையம் அருகில் துவங்கிய அணிவகுப்பு நகர் முழுவதும் வலம் வந்து மாட்டுபட்டி ரோட்டில் முடிந்தது. இன்ஸ்பெக்டர் ரெஜி எம். குன்னிபரம்பன், எஸ்.ஐ., சந்தோஷ் உட்பட போலீசார், மூணாறு ஊராட்சியினர், சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர். -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X