செய்தி சில வரிகளில்

Added : மார் 25, 2020
Share
Advertisement


ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழு ஊதியம்

இந்திய ரயில்வேயில், ரயில் நிலைய பராமரிப்பு, சுகாதார பணிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக, நாடு முழுவதும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இவர்களில் பலரும் பணியை தொடர முடியவில்லை. ஆனாலும், ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும், மார்ச் மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவது என, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரூ.15 கோடி முக கவசங்கள் பறிமுதல்

மும்பையில் உள்ள சாகர் பகுதியில், ௨௫ லட்சம் எண்ணிக்கையிலான முக கவசங்களை, பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக, சிலர் நான்கு லாரிகளில் கொண்டு சென்றனர். தகவல் அறிந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்ததுடன், நான்கு பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட முக கவசங்களின் மதிப்பு, ௧௫ கோடி ரூபாய் என, மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார்.

பாக்., குண்டு வீச்சில் இந்தியர் காயம்

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை கோடு அருகே, பாக்., ராணுவத்தினர், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் குண்டு வீச்சில் ஈடுபட்டனர். இதில், அந்த பகுதியில் வசிக்கும் போத்ராஜ் என்பவர் காயம் அடைந்தார். பாக்., தாக்குதலுக்கு, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர், தக்க பதிலடி கொடுத்தனர் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மீண்டும் பணி

கேரளாவில், கடந்த ஆண்டு ஆக., ௩ல், பத்திரிகையாளர் மீது காரை ஏற்றி, அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அவர், தற்போது சுகாதாரத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணி நியமனத்திற்கு, கேரள பத்திரிகையாளர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய நிறுவனத்திற்கு தடை

டில்லியில், ஓம் பாலாஜி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், டி.எம்.டபிள்யு., என்ற கம்பெனி முத்திரையுடன், இ ரிக் ஷாக்களை தயாரித்தது. இந்த முத்திரையை எதிர்த்து, ஜெர்மனியை சேர்ந்த, பிரபல பி.எம்.டபிள்யு., நிறுவனத்தினர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பி.எம்.டபிள்யு., போன்ற, ஏமாற்றும் விதத்திலான அடையாளத்தை, இந்திய நிறுவனம் பயன்படுத்த, நீதிபதி ஜெயந்த் நாத், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
வங்கதேச குண்டு வெடிப்பு
மும்பையில் ஒருவர் கைது

வங்க தேசத்தின் இலிஸ்பூர் நகரில், 2002ம் ஆண்டு, ஒரு மசூதியில் மூன்று குண்டுகள் வெடித்தன. இதில், ஒருவர் இறந்த நிலையில் பலர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் தானே போலீசார், வங்க தேசத்தின் சத்கிராவைச் சேர்ந்த, மொபஜல் உசேன், ௪௨, என்பவரை, நவி மும்பை பகுதியில் நேற்று கைது செய்தனர்.

சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்குள் தகராறுகுண்டு பாய்ந்து இருவர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், தால் ஏரி பகுதியில் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது, பணி தொடர்பாக, வீரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டதில், குண்டுகள் பாய்ந்து இரண்டு வீரர்கள் பலியாயினர். அங்கு விரைந்து வந்த உயர் அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
70 வீரர்கள் உயிரிழப்பு
கனோ: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின், போர்னோ மாகாணத்தில், பாதுகாப்புப் படையினர், நேற்று ராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். அப்போது, பயங்கரவாதிகள்வெடிகுண்டுகளை வீசியும், கனரக ஆயுதங்கள் மூலமும், அந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 70 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
__
64 சடலங்கள் கண்டெடுப்பு
மபுடோ: ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கின், டெட்டே மாகாணத்தில், நேற்று சந்தேகத்திற்குரிய வகையில், ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அதை தடுத்து நிறுத்தி, ஆய்வு செய்ததில், 64 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 14 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், எத்தியோப்பியா நாட்டினர் என்பது தெரியவந்துள்ளது.
__
இந்தியர்கள் கைது
நியூடார்க்: அமெரிக்க எல்லைக்குள், சட்டவிரோதமாக நுழைந்த, இரண்டு இந்தியர்களை, அமெரிக்க எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இவர்கள், இருவரும் கனடாவில் இருந்து வந்தவர்கள் என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
__
இந்திய டாக்டர் மீது வழக்குப்பதிவு
நியூயார்க்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், 'பிளாஸ்டிக் சர்ஜனாக' பணிபுரிந்து வந்தவர், மனிஷ் ராஜ் குப்தா, 49. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் மீது, தற்போது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவரை, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X