ஊரடங்கை மீறினால் 1 ஆண்டு சிறை புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement


புதுச்சேரி :'புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கத்தில், புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மளிகை, பால், காய்கறி, பழம், மருந்து கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் நேற்று அதிகளவில் சாலைகளில் நடமாடினர். கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பின் முதல்வர் அளித்த பேட்டி:
நமது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தையே கொரோனா உலுக்கி கொண்டிருக்கிறது. சுற்றுலாத் தலமாக உள்ளதால் புதுச்சேரி மாநிலம் மிக விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. புதுச்சேரி மாநில மக்கள், வரும் 31ம் தேதி வரை வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்று கடுமையாக நாங்கள் கூறியும்கூட, அதை பொருட்படுத்தாமல், வாகனங்களில் வெளியே வந்து கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய கவலையை தருகிறது. உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
கொரோனா ஒருவருக்கு தொற்றினால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும்; அனைத்து மக்களும் பாதிக்கப்படுவர். கிராமப்புற மக்கள் புரிந்து கொள்ளாமல் வாகனங்களில் நகரத்துக்கு வருவதும், போலீசாருடன் சண்டை போடுவதுமாக உள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்துவதுதான். அதனால், முழுமையாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மக்களை இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் பேரிடர் சட்டமும், தொற்று நோய் தடுப்பு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை யார் மீறுகிறார்களோ அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை, தொற்று நோய் தடுப்பு சட்டங்களை கடுமையாக நிறைவேற்றுவோம். உத்தரவை மீறுபவர்களுக்கு ஓராண்டு தண்டனை உண்டு. மக்கள் வீட்டை வெளியே வரக்கூடாது. மீறி வருபவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம்.
மக்கள் வெளியில் வராமல் கண்காணிப்பதற்காக, ஐ.ஆர்.பி.என்., போலீசாரை பணியில் ஈடுபடுத்த உள்ளோம். தேவைப்பட்டால் சி.ஆர்.பி.எப்., படையை கொண்டு வந்து மக்கள் சாலையில் கூடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.
இன்று 25ம் தேதியில் இருந்து, வரும் 28ம் தேதி வரை ஆகிய நான்கு நாட்களுக்கு புதுச்சேரியில் அனைத்து கடைகளும் மூடி இருக்கும். ஒரு கடைகூட திறந்து இருக்காது. பால், மருந்து கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமலில் இருக்கும்.
இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X