இந்தியா

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இலவச சிகிச்சை

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கும் வரை, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மைய மாநில தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில், அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜிப்மர் மற்றும் மாநில அரசின் பொது மருத்துவமனைகளில், சாதாரண அறுவை சிகிச்சைகளுக்கு வரக்கூடாது என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எலும்பு முறிவுக்கு உடனடியாக சிகிச்சை பெற்றால், விரைவில் சரியாகும். காலதாமதமானால், எலும்பு முறிவு பிரச்னை குணமாகாமலும் போக அதிக வாய்ப்புகள் உண்டு.

அதுபோல், டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளை, நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால், அவர்கள் இறக்க நேரிடக்கூடும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், பிற நோய்களில், மக்களை இறக்க செய்துவிடக்கூடாது.அதை தடுக்கும் வகையில் கொரோனா பீதி போகும் வரை அல்லது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கும் வரை, புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும். அல்லது புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் குறுகிய கால மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தி மக்கள் நலன் காக்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பதிவு செய்துள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாரந்தோறும் மாத்திரை தேவைப்படும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று அவர்களது மருந்தை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X