இந்தியா

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது எப்படி

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனரா வைரஸ் தொற்று ஏற்படும் விதம் மற்றும் தடுப்பது எப்படி என ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா (கோவிட் 19) தொற்று நோய், கொரோனா வைரஸ் கிருமி தொற்று, எச்சில் துளிகள் (இருமல், தும்மல் மற்றும் மிக அருகில் பேசுதல் போன்ற சந்தர்பங்களில் அருகில் உள்ளவர் முகத்திலோ அல்லது கைகளில் படுவது) மூலமாக அதிகமாக பரவுகிறது. மிகச்சிறிய அளவில் கதவு, தாழ்ப்பாள், மேசை மற்றும் நாற்காலி போன்ற மேற்பரப்பில் உள்ள எச்சில் துளிகள் மூலமாக பரவ வாய்ப்புள்ளது.
இந்த நோய் தொற்றை சக மனிதர்களுக்கு இடையில் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலமாகவும், மற்ற இயல்பான பொது சுகாதார செயல்களான இருமல், தும்மல் போன்ற சந்தர்ப்பங்களில் முகத்தை மூடிக் கொள்வது, சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவது போன்ற நடவடிக்கைகளால் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.தற்போது உள்ள தொற்று நோய் அதிகமுள்ள நேரங்களில் அவசர தேவையின்றி வெளி போக்குவரத்தை தவிர்ப்பதன் மூலம் இந்த தொற்று பரவுவதில் இருந்து தவிர்க்க முடியும்.

பொது மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து சமூக விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.மருத்துவமனைக்கு வருவதை அவசர காரணங்களை தவிர பிற அனைத்து விஷயங்களுக்கும் தவிர்ப்பது முக்கியம். மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல் அதிகம் மற்றும் நிறைய தீவிர நோய்க்கு சிகிச்சை பெற கூடிய நோயாளிகள் அதிகம் உள்ளதால், நோய் தொற்று அபாயம் மிக அதிகம்.வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று வந்த பயணிகள் மற்றும் அவர்களுடன் அருகாமையில் இருந்த நபர்கள், நேரடியாக மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

அவர்கள் கோவிட் 19 க்கான உதவி தொலைபேசி எண் 104 மூலம் தொடர்பு கொள்ளவும். இதன் மூலமாக பொது மக்களுக்கு இவர்கள் மூலமாக நோய் தொற்று வருவதை தடுக்கவும், தொற்று நோய் சார்ந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.நோய் தொற்று ஏற்பட்ட பெரும்பாலானவர்களுக்கு வியாதியின் தன்மை மிக லேசானதாகவே இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு வீட்டிலேயே குறைந்தபட்ச இடைவெளி மற்றும் இயல்பான பொது சுகாதார நடவடிக்கைகளால் குணப்படுத்த முடியும். மூச்சு விட தடுமாறும் நிலையில் மருத்துவமனை வைத்தியம் தேவைப்படுகிறது.

மருத்துவமனையில் நோய் தொற்றுக்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிப்பதால் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயமாகிறது.பொதுமக்கள் கோவிட் தொற்று சம்பந்தமான பல தரப்பட்ட சமூக ஊடகங்களில் வரும் இடைவிடாத செய்திகளால் அச்சமடைய வேண்டாம். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமகன்களாக அரசின் வழிமுறைகளை ஏற்று ஒரு முயற்சியுடன் செயல்படுவதன் மூலம் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X