அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழை குடும்பத்திற்கு ரூ.3,000 நிதியுதவி வேண்டும்: வைகோ

Added : மார் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை:''தமிழகத்தில், ஏழை, எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், அரசின் உதவித்தொகையாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ கூறினார்.சென்னை தாயகத்தில், அவரது பேட்டி:
அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, 400 பேர் இறந்து விட்டனர். சீனாவை விட, இத்தாலியில், கூடுதலாக மக்கள் இறந்துள்ளனர். ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவே, இந்தியாவுக்கு உள்ளே ஊடுருவினால், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதை, குறை சொல்வதற்கு இல்லை.
ஏழை, எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், 3,000 ரூபாய் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ரேஷன் கார்டுகளை எடுத்து வர வேண்டும் என்று வலியுறுத்தாமல், அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்கலாம்.
கிரிமி நாசினிகள், கையுறைகள், சானிட்டைசர்கள் போன்ற, தொற்று தடுப்பு பொருட்களை, போர்க்கால அடிப்படையில் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகளுக்கு, தட்டுப்பாடு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, வைகோ கூறினார்.
***

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
25-மார்-202016:22:24 IST Report Abuse
Baskar தேர்தலுக்கு தேர்தல் பெட்டி வாங்கிய பணமெல்லாம் என்னாச்சி. அது போக விடுதலை புலிகளிடம் மாதா மாதம் பணம் வாங்குகிறாயே அதுவும் என்னாச்சி. அந்த பணத்திலிருந்து கொஞ்சம் கொடுக்க வேண்டியது தானே அமீனா.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-மார்-202012:30:51 IST Report Abuse
RajanRajan துவங்கிட்டானுங்க கொரான அரசியல் வித்தையை. இத்தினி நாள் எங்கே உலாத்திக்கிட்டு இருந்தானுங்களோ அத்தனை பேரும் நெய் ஊத்த துவங்கிடுவானுங்க. உங்க கட்சி பணத்தில் இருந்து மக்களுக்கு என்ன பண்ண போறீங்கன்னு சொல்லுப்பா மைக்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-மார்-202012:28:17 IST Report Abuse
RajanRajan .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X