பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் இலவச 'மாஸ்க்'

Added : மார் 25, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:-துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகை தரும் புகார்தாரர்களுக்கு, இலவச முககவசம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.'போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகுதான், போலீஸ் ஸ்டேஷனில் அனுமதிக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களை, காற்றோட்டமான அறைக்குள் மட்டும் அனுமதிக்க வேண்டும். முழுவதுமாக மூடப்பட்ட, 'ஏர்கண்டிஷன்' அறையில் அனுமதிக்க கூடாது.'போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றங்களை ஆன்-லைன் வழியாக மட்டுமே செய்ய வேண்டும். தபால் போன்றவற்றை அலுவலக வாசலிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். போலீஸ் ஸ்டேஷன்களில் அவசியமின்றி ஆலோசனை கூட்டம் நடத்தக் கூடாது' உள்ளிட்ட, பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதையொட்டி, துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வரும் புகார்தாரர்கள் தங்களுடைய கைகளை திரவ வடிவிலான சோப்பு போட்டு கழுவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் புகார்தாரர்கள் குறிப்பிட்ட தொலைவில் நின்று புகார்களை தெரிவிக்கவும், அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, புகார்தாரர்கள் அனைவருக்கும், முககவசங்கள் இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X