பொது செய்தி

தமிழ்நாடு

தனித்திரு; விழித்திரு! கிராமங்களில் கொரோனாவுக்கு, 'செக்':மக்கள் ஒத்துழைத்தால் சாத்தியம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தனித்திரு; விழித்திரு! கிராமங்களில் கொரோனாவுக்கு, 'செக்':மக்கள் ஒத்துழைத்தால் சாத்தியம்

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளை போல், பல்வேறு கிராமங்களிலும், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகள், தீவிரமடைந்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் நோய் தடுப்பு திட்டத்துக்கு, பொதுமக்கள் ஒத்துழைத்தால், நோய் பரவலை தடுக்க முடியும்.உலகையே அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பரவுதலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விழிப்புணர்வோடு, தங்கள் வீடுகளில் தங்கி, 'சமூக விலகியிருத்தல்' திட்டத்தை கடைபிடித்தால், வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க முடியும்.கிராம மக்கள் மத்தியில், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளிலும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஜடையம்பாளையம் ஊராட்சியில், 130க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, கிருமிநாசினி மருந்து தெளித்தனர். கொரோனா வைரஸ் தடுக்க கைகளை எவ்வாறு சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து, அதிகாரிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.கோவை- - நீலகிரி மாவட்ட எல்லையில், ஓடந்துறை ஊராட்சி அமைந்துள்ளது. ஊட்டி, குன்னுாரில் இருந்து வரும் வாகனங்களை, கல்லாறு சோதனைச்சாவடியில் நிறுத்தி, கிருமிநாசினி மருந்தை, ஊராட்சி அலுவலர்கள் தெளித்தனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு, மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி, வாகனங்களில் 'மைக்' வாயிலாக அறிவிக்கப்பட்டது. வனத்துறையினர், வருவாய்த்துறையினரும் இணைந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.கோவை- - ஈரோடு மாவட்ட எல்லையில், சின்னகள்ளிபட்டி ஊராட்சி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர், சத்தியமங்கலம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும், சின்னக்கள்ளிப்பட்டி சோதனைச்சாவடியில் நிறுத்தி, கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளில், ஊராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லைகளில் கண்காணிப்புஅனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று மாலை, 6:00 மணியிலிருந்து ஏப்., 1 வரை இது நடைமுறையில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை - - ஈரோடு மாவட்ட எல்லை பெரியகள்ளிப்பட்டியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். நீலகிரி மாவட்ட நுழைவுவாயிலான, கல்லாறு அருகே உள்ள பர்லியாரிலும், போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X