பொது செய்தி

தமிழ்நாடு

மழைத்துளி... உயிர்த்துளி! விவசாயிகள் மகிழ்ச்சி

Added : மார் 25, 2020
Share
Advertisement
 மழைத்துளி... உயிர்த்துளி! விவசாயிகள் மகிழ்ச்சி

பெ.நா.பாளையம்:-பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரத்தில், இரு நாட்களாக பெய்யும் சாரல் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக, கோடை வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, கோவை வடக்கு புறநகர் பகுதியில் மாலையில் குளிர் காற்றுடன் மழை பெய்தது.விவசாயிகள் கூறுகையில், 'கத்திரிக்காய், தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகளுக்கு இம்மழை பயனுடையதாக இருக்கும். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை நீக்க உதவும். இம்மழையை நம்பி உழவு செய்வது கடினம். மேலும், சில நாட்கள் மழை தொடர்ந்தால், கோடை உழவு செய்ய பயனுடையதாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X