பொது செய்தி

தமிழ்நாடு

'வேதியியல் ரொம்ப ஈஸி...' பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

Added : மார் 25, 2020
Share
Advertisement
 'வேதியியல் ரொம்ப ஈஸி...' பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

அன்னுார்:பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வு நேற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.அன்னுார் வட்டாரத்தில், ஐந்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். நேற்றுடன், பிளஸ் 2 தேர்வு முடிந்ததால், தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர், பேனா மையை தெளித்துக் கொண்டு உற்சாகத்துடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் கூறியதாவது:கவி நிஷாந்த், அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னுார்:வேதியியல் கேள்விகள் எளிதாக இருந்தன. பல கேள்விகள் படித்த பாடத்தில் இருந்து வந்திருந்தன. கடைசி தேர்வு எளிமையாக இருந்தது, மகிழ்ச்சி தருகிறது.சவீன், அரசு மேல் நிலைப்பள்ளி, அன்னுார்:வேதியியலில் ஒரு மதிப்பெண் கேள்விகள், பாடத்துக்கு வெளியே கேட்கப்பட்டிருந்தன. இதுவரை எழுதிய தேர்வுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தமிழ், ஆங்கிலம் எளிதாக இருந்தன.கோகுல் குமரன்,அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னுார்:கணக்கு பதிவியலில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தன.அதிக மதிப்பெண் பெற முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X