சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டும் குரங்கு: அலறும் மக்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுாரில் மிரட்டும் குரங்குகளால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.அன்னுார் நகரில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 10க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றுகின்றன. பயணிகள் அசந்து இருக்கும் நேரத்தில், பையைப் பிடுங்கி செல்கின்றன. தின்பண்டங்கள் இருந்தால், சேதப்படுத்துகின்றன. இதேபோல், கோவை ரோட்டில், அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அருகில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி, துணிகளை கிழிப்பது, தின்பண்டங்களை எடுப்பது என, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.அன்னுார் பேரூராட்சி அலுவலகத்திலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X