பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மைப் பணிக்கு முதலிடம்: மேட்டுப்பாளையம் நகராட்சி உறுதி

Added : மார் 25, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:''மேட்டுப்பாளையம் நகரில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களை சுத்தம் செய்ய, 99 நகராட்சி துாய்மை பணியாளர்கள், 151 தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் என, மொத்தம், 250 பேர் உள்ளனர்.ஊழியர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொள்வதால், நகரை முழுமையாக சுத்தம் செய்ய முடியாமல், ஆங்காங்கே குப்பை குவிந்தும், சாக்கடைகள் அடைபட்டும் உள்ளன. மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் உட்பட, வார்டுகளில் துாய்மைப் பணி என்பது கேள்விக்குறியாக இருந்தது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை அடுத்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் பகுதி தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது. மேலும், 'மகாவீர்' அமைப்பினர் கட்டிக்கொடுத்த, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்தனர். பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாக்கடைகளில் கிருமிநாசினி மருந்து தெளித்து, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் நகரில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். சுகாதார ஆய்வாளர்களுக்கு, துாய்மை பணிகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X