பொது செய்தி

தமிழ்நாடு

உடல் நலக் குறைவான யானைக்கு சிகிச்சை

Added : மார் 25, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், உடல்நலக்குறைவாக இருந்த ஒரு ஆண் யானைக்கு, வனத்துறையினர், மருத்துவக் குழு உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பிரிவு, நெல்லித்துறை அடர்ந்த வனப்பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, இடது முன்னங்காலில் லேசான வீக்கத்துடன், மெதுவாக நடந்து வந்ததை, வனத்துறையினர் பார்த்துள்ளனர்.மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் சுண்டப்பட்டி பிரிவு வனவர் ஸ்ரீராம், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் என, 30க்கும் மேற்பட்டவர்கள், கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) டாக்டர் மனோகரன் தலைமையில் வனப்பகுதியில் யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.கோவை சூழல் தணிக்கை நிலைய வனச்சரக அலுவலர் பழநிராஜா தலைமையில் மற்றொரு குழுவினர், அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.யானை வரும் பாதைகளில், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் மருந்து மாத்திரைகளை வைத்து, சிகிச்சையை துவக்கினர். வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X