இந்தியா

ஆன்லைனில் கட்டணங்களை செலுத்திட மின் துறை அறிவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டண மையங்களுக்கு நுகர்வோர் வருவதை தவிர்த்து, ஆன்லைனில் கட்டணங்களை செலுத்திட மின் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு; கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்கள் மற்றும் மின் கணக்கீட்டாளர்களை பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் (23ம் தேதி ) முதல் மின் மீட்டர் கணக்கீடு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இம்மாத மின் கட்டணம், கடந்த மூன்று மாதங்களின் சராசரி கணக்கீட்டின் படி, வசூலிக்கப்பட உள்ளது. இந்த தொகை, பின் வரும் மாதங்களில் மின் கணக்கீடு, எடுத்து கணக்கிடப்பட்டு, எஞ்சியுள்ள தொகைக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், மின் கட்டணம் செலுத்துவதற்கு நுகர்வோர்கள், மின் கட்டண மையத்திற்கு வருவதை தங்களின் நலன் கருதி தவிர்க்க வேண்டும். நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை https://pedservices.py.gov.in என்ற இணையதளத்தில் ் ஆன்லைன் மூலமாகவும், பீம், பேடிஎம், கூகுல் பே, அமேசான் பே, மொபிக்விக் என்ற மொபைல் செயலி மூலமாகவும் செலுத்தலாம். பணம் செலுத்தும் போது, தடங்கல் ஏற்பட்டால், டெலிகிராம் ஆப் வழியாக 'pedservices public' என்ற குரூப்பில் தங்களின் இடர்பாடுகள் சரி செய்யப்படும்.

டெலிகிராம் ஆப்பின் லிங்க், https://pedservices.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மின் நுகர்வோர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X