பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கொரோனா கோடு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரிசையாக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடு போடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று மாலை 6:00 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் உணவு, மருந்து உள்ளிட்ட பொது மக்களின் அன்றாட தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மூலமாக கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஒன்று கூடி நிற்பதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், கடைகளுக்கு முன் இடைவெளியுடன் கோடு போட்டும், வட்டம் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளது.ஒரு மீட்டர் இடைவெளியுடன் வரிசையாக வந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X