இந்தியா

எச்சரிக்கை! முக கவசம் கூடுதல் விலைக்கு விற்றால்... குடிமை பொருள் வழங்கல் துறை

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020
Share
Advertisement
எச்சரிக்கை! முக கவசம் கூடுதல் விலைக்கு விற்றால்... குடிமை பொருள் வழங்கல் துறை

புதுச்சேரி : முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; முக கவசம், 2 மற்றும் 3 அடுக்கு அறுவை சிகிச்சை முக கவசம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தில் அடங்கும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், அதன் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் தடையின்றி பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும், அப்பொருட்களின் குறைந்த பட்ச இருப்பு எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

அதிக பட்ச சில்லரை விலைக்கும் கூடுதலாக விற்பனை செய்யகூடாது. பொருட்களை பதுக்கி வைக்கவும் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால், 1955ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் காவல் கண்காணிப்பாளர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தாசில்தார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.எனவே, பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனை வணிகர்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X