இந்தியா

கொரோனா தீவிரத்தை உணராத புதுச்சேரி மக்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

பாகூர் : அரசின் உத்தரவுகளை மதிக்காமல், அலட்சியமாக செயல்படும் நபர்களால், புதுச்சேரி அபாயகரமான சூழ்நிலையை சந்திக்க கூடுமோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 463க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது இரண்டாம் நிலையில் உள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்கு செல்லவிட்டால் விபரீதம் நேரிடும் என மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதனால், புதுச்சேரியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க நேற்று முன்தினம் இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம். அத்தியாவசிய காரணமாக இருப்பின், முக கவசம் அணிந்து தான் வெளியில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று நகரில் கடைகள் மூடப்பட்டிருந்தது. வெளிமாநில வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலின் விபரீதத்தை உணராத பலர் நேற்று பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் நகர் வலம் வந்தனர்.அதில், பலர் சொற்ப விஷயத்தை ஒரு காரணமாக கூறுவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை எரிச்சலடைய செய்து விடுகிறது. அரசின் தடை உத்தரவுகளை மதிக்காமல், அலட்சியமாக செயல்படும், நபர்களால், புதுச்சேரி அபாயகரமான சூழ்நிலையை சந்திக்க கூடுமோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X