சம்பவம் செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு வேண்டும்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லையெனில் கடைகள் மூடப்படும்' என கலெக்டர் கிரண் குராலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் இன்று (நேற்று) மாலை 6:00 மணி முதல், வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூட்டமாக இருத்தல் கூடாது. அவர்க ளும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட போக்குவரத்துக்கு நிறுத்தப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.பால், காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.அதேபோல், அனைத்து ஓட்டல்களிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அமர்ந்து சாப்பிட கூடாது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பாக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.நாள்தோறும் 3 முறை கிருமி நாசினி அடிக்க வேண்டும். விதிமுறையை கடைப்பிடிக்காத கடைகள் உடனடியாக மூடப்படும். கடந்த 16ம் தேதிக்கு முன்னர், திருமணம் செய்வதற்கு மண்டபம் 'புக்' செய்திருந்தால், அதில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் 200 பேர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளி நபர்கள் யாரும் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடாது. அவர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும். அனைவரும் முக கவசம் வாங்கி உபயோகித்து வருகின்றனர். யார் யார் முக கவசம் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உழவர் சந்தைக்கு வெளியே காய்கறிகள் விற்பனை ஆய்வு செய்து வரைமுறைப்படுத்தப்படும்.காவல் துறை மூலம் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லைகள் இன்று (நேற்று) முதல் மூடப்படுகிறது. 1,000க் கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பஸ் நிலையம், டீ கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றனர். மக்கள் அனைவரும் 144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கிரண்குராலா கூறினார்.எஸ்.பி., ஜெயச்சந்திரன், டி.ஆர்.ஓ., சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X