ஊரடங்கு உத்தரவு அமல் காரைக்கால் வெறிச்| Dinamalar

இந்தியா

ஊரடங்கு உத்தரவு அமல் காரைக்கால் 'வெறிச்'

Added : மார் 25, 2020
Share

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் வரும் 31ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

பால் பூத், பழக்கடை, மருந்தகம், மளிகை கடைகள் சில மட்டும் திறந்திருந்தன. ஒரு சில ஓட்டல்கள் திறந்திருந்தன. ஆனால், அங்கு சாப்பிட அனுமதிக்கவில்லை. பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குள் குறைவான பஸ்கள் மட்டும் இயங்கின. மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்த வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டதால், மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X