இந்தியா

கொரோனாவை அடியோடு வீழ்த்திட வடக்கு மாநில தி.மு.க., கோரிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை ஆரம்பத்திலேயே அடியோடு வீழ்த்திட மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்' என, வடக்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் பணத் தட்டுப்பாடு காரணமாக, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பெரிய அளவில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கின்ற ஏற்பாடுகளை மனதிற்கு திருப்தியான முறையில் புதுச்சேரி அரசால் செய்ய முடியவில்லை. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் புதுச்சேரி அரசு அப்படியே திகைத்து நிற்கிறது.நிதியுதவி அளித்து காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள மத்திய அரசு, புதுச்சேரிக்கு ஒரு பைசாகூட இதுவரை கொடுக்காமல் உள்ளது. அதன் பவர்புல் புதுச்சேரியின் பிரதிநிதிகளோ மத்திய அரசுதான் உதவிட முடியும் என தெரிந்திருந்தும், இதுவரை எந்தவிதமான உதவிகளையும் பெற முயற்சி எடுத்ததாக எந்த செய்திகளையும் இதுவரை பார்க்க முடியவில்லை.

நமக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி., பணம்கூட இந்த இக்கட்டான நேரத்தில் அளிக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு இப்போதைய தேவை கொரோனாவை எதிர்த்துப் போராட மருத்துவ வசதிகளுக்கான பணமும், ஊரடங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவித் தொகைகளுமே. தற்போதைய சூழலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரமும், ரேஷனில் அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக வழங்குவது சற்று ஆறுதலை தரும்.

வணிக நிறுவனங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு வரித் தள்ளுபடி மற்றும் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளித்தல் போன்றவை சற்று நிம்மதியைத் தரக் கூடிய செயலாக இருக்கும். இதற்கு பணம் மட்டுமே தேவை. எனவே, பணத்தை காலதாமதமில்லாமல் உடனே அளித்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவை அடியோடு ஆரம்பத்திலேயே வீழ்த்திட உதவிடுமாறு மத்திய அரசையும், அதன் பிரதிநிதிகளையும் புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க., சார்பாக கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X