வயிற்று வலி தாங்காமல் மாணவி, தூக்குபோட்டு தற்கொலை | Dinamalar

இந்தியா

வயிற்று வலி தாங்காமல் மாணவி, தூக்குபோட்டு தற்கொலை

Added : மார் 25, 2020
Share

புதுச்சேரி : வயிற்று வலியால் அவதிப்பட்ட கல்லுாரி மாணவி, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, உப்பளம் நேதாஜி நகர் ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகள் சோபியா மேரி, 20; தனியார் கல்லுாரியில் பி.ஏ., இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கு, மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. நேற்று முன்தினம் சோபியா மேரிக்கு, வயிற்று வலி அதிகரித்துள்ளது.இதில் விரக்தியடைந்த சோபியா மேரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். வீட்டின் அறைக்கு சென்ற சோபியா மேரி, டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அறை கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக் கொண்டுள்ளார்.

வெகுநேரமாக டி.வி. சத்தம் அதிகமாக இருந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து பார்த்தபோது, சோபியா மேரி, துாக்கில் தொங்கியுள்ளார். உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X