சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்.பி.ஏ., உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து வழக்கு

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை பெரிய ஆலங்குளம் செல்வம். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை உள்ளூர் திட்டக்குழுமம் (எல்.பி.ஏ.,) கலெக்டரை தலைவராகக் கொண்டு செயல்படுகிறது.

இதில் உறுப்பினராக இருந்தேன். கட்டட வரைபட அனுமதி வழங்குதல் தொடர்பான பல மனுக்கள் 2018 லிருந்து பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. நகர் ஊரமைப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் இருந்தேன். என்னை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அரசு உத்தரவிட்டது. இதில் விதிகளை பின்பற்றவில்லை. அரசின் உத்தரவை ரத்து செய்து, என்னை உறுப்பினராக தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எம்.தண்டபாணி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர், நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர், மதுரை எல்.பி.ஏ., உறுப்பினர் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X