தமிழ்நாடு

தடை உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை : தமிழக அரசு தடையுத்தரவை மீறி செயல்பட்டால் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கலெக்டர் வினய் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் மதுரை திரும்புகின்றனர். அவர்கள் பொது சுகாதார அலுவலர்களிடம் தங்கள் பயண விவரங்களை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட நிலவரத்தை ஆராய்ந்து, பொதுமக்கள் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஏதுவான சூழல் உள்ளது. அந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* அத்தியாவசிய தேவையின்றி பொது இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.

* வீட்டை விட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து, 1 முதல் 3 மீட்டர் வரை சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்.

* அத்தியாவசிய, அவசர சேவை நீங்கலாக அரசு, தனியார் கார்கள், ஆட்டோ, டாக்ஸி மாவட்டங்களுக்குள்ளும், மாநில அளவிலும் இயங்க கூடாது.

* அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்படும். மாவட்ட நிர்வாகம், போலீஸ், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் சப்ளை, சிறை, பொது நலம், மருத்துவத்துறை, நீதித்துறை, உள்ளாட்சி நிர்வாகம், கருவூலம் அதன் எல்லைக்குள் மட்டுமே இயங்கும்.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். தனியார் மருத்துவ சேவை நிறுவனங்கள் செயல்பட தடையில்லை.

* மார்ச் 31 வரை கல்வி நிறுவன ஆசிரியர்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம்.

* தேவையில்லாத அனைத்து கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்த கூடாது.

* அனைத்து ஓட்டல்கள் மூடப்படும். உணவுப்பொருட்களை பார்சலாக வழங்கலாம்.

இந்த உத்தரவு நேற்று மாலை 6:00 முதல் ஏப்.,1 காலை 6:00 மணி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 271, 270, 269, 188 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X