தமிழ்நாடு

கொரோனா சமூகப்பரவலாக மாறிய மதுரையில் சோதனை கூடம் இல்லை; மாநில அரசு ஏற்பாடு செய்யுமா

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை: மதுரையில் கொரோனாவை உறுதி செய்யும் பரிசோதனை கூடம் இல்லை. உடனடியாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மாநிலத்தில் முதல் முறையாக மதுரையில் தான் கொரோனா சமூகப்பரவலாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் ஒருவரும், அறிகுறியுடன் 8 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பிற மாவட்டத்தினரும் உள்ளனர். பக்கத்து மாவட்டத்தில் அறிகுறி ஏற்பட்டால் மதுரைக்கு தான் பரிசோதனைக்கு வருகின்றனர்.

ஆனால் கொரோனாவை உறுதி செய்யும் பரிசோதனைக் கூடம் இங்கு இல்லை. அறிகுறி உள்ளவர்களிடம் ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து தேனி பரிசோதனை கூடத்திற்கு தான் அனுப்ப வேண்டியுள்ளது. முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அறிகுறி இருந்தாலும் சிலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை.

இது பெரும் பின்னடைவாக உள்ளது. மதுரையில் சமூகப்பரவலாக கொரோனா உருமாறிய நிலையில் பரிசோதனைக் கூடம் அத்தியாவசியமாகும். அதற்கு தேவையான கருவிகள் வாங்க, ஊழியர்கள் நியமிக்க போர்கால நடவடிக்கை தேவை. இதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு வாரத்தில் பரிசோதனை கூடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X