தமிழ்நாடு

பொது இடங்களில் கூடும் மக்கள்; போலீஸ் கமிஷனர் வேதனை

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை: ''மதுரையில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது'' என போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வேதனை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:''டூவீலர், கார், ஆட்டோக்களில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும். கொரோனா நம்மை தாக்காது என அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் 14 நாட்களுக்கு பிறகு தான் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால் பிறருக்கு எளிதில் பரவும். அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க வேண்டும். பிற கடைகளை அடைக்க வேண்டும்.

பொதுஇடங்களில் கூட்டமாக நிற்பதால் நோய் பரவும். நண்பர்கள், உறவினர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது வேதனை அளிக்கிறது. நோய் தடுப்பு முறைகளை முழுமையாக பின்பற்றி 144 தடை உத்தரவை அனைவரும் கடைப்பிடித்து அரசு, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X