தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளியே வராதீங்க! சுயஒழுங்கு, கட்டுப்பாடு முக்கியம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளியே வராதீங்க! சுயஒழுங்கு, கட்டுப்பாடு முக்கியம்

மதுரை : கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை பின்பற்றி மக்கள் இன்று(மார்ச் 25) முதல் வெளியில் வருவதை தவிர்த்து சுயஒழுங்கு, சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா எதிரொலியாக அரசு அறிவித்த தடைஉத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று முன் தினம் முதல்வர் பழனிசாமி இதை அறிவித்தது முதல் மதுரை நகரில் கடைகள், மார்க்கெட்கள், காய்கறி சந்தைகள், பழக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலசரக்கு கடைகள், ஸ்டோர்களில் மெயின் கதவுகளை பூட்டும் அளவிற்கு நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் இருந்தது.

ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்தனர். காய்கறி, பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நேற்றும் நகரில் கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.பஸ்கள், வாகனங்களின் எண்ணிக்கையும் மற்ற நாட்களாக போல இருந்தது. இது அலுவலர்கள், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தாலி போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் அதிகளவு வந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தது. எனவே கொரோனா பாதிப்பை தவிர்க்க மக்கள் இன்று முதல் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


ஆதரவற்றோருக்கு உணவு


144 தடை உத்தரவால் ஆதரவற்றோர் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி சார்பில் 'சோஷியல் கிச்சன்' துவங்கப்படுகிறது. ஒரு இடத்தில் உணவு தயாரித்து, ஆங்காங்கேயுள்ள ஆதரவற்றவர்களுக்கு 3 வேளையும் வழங்கப்படும். முதற்கட்டமாக 500 பேருக்கு தர உள்ளனர். தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். அவர்களை மீட்டு தங்க வைக்கவும் மண்டலம்தோறும் முகாம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X