சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலாளர் தற்கொலை விவகாரம்; ஆவின் அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை ஆவின் பொருட்கள் தயாரிப்பு பிரிவு துணை பொது மேலாளர் முகமது பாரூக் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஆவினில் இப்பிரிவு மேலாளராக இருந்தவர் புகழேந்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மார்ச் 11ல் அவர் தற்கொலை செய்தார்.மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரில், 'அதிகாரிகள் 'டார்ச்சர்' மற்றும் பணிச்சுமையால் தற்கொலை செய்தார். பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா, உதவி பொது மேலாளர் கிருஷ்ணன், துணை பொது மேலாளர் முகமது பாரூக், ஆடிட்டர் செந்தில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கிடையே ஈரோடு ஆவின் கூடுதல் பொது மேலாளர் அலெக்ஸ் தலைமையில் ஆவினில் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதா என ஆய்வு நடந்தது. இதன் அறிக்கை நிர்வாக இயக்குனர் வள்ளலாரிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் முகமது பாரூக் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி., விசாரணை கோரி மனு:

புகழேந்தியின் சகோதரர் கண்ணன் (போலீஸ் எஸ்.ஐ., ) கூறியதாவது: இவ்வழக்கை ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர். வருவாய் இழப்பு ஏற்பட்டதா என நடந்த தணிக்கை ஆய்வில் 500 நெய், வெண்ணெய் பாக்ஸ்களை சில அலுவலர்கள் தவறாக கணக்கிட்டதாக தெரிய வந்துள்ளது. புகழேந்திக்கு தொடர்பில்லை.

இந்நிலையில் நாங்கள் புகாரில் குறிப்பிட்ட முகமது பாரூக் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் உண்மை நிலவரம் தெரிய சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X