கருமாத்தூர் -- விக்கிரமங்கலம் இணைப்பு ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை| Dinamalar

கருமாத்தூர் -- விக்கிரமங்கலம் இணைப்பு ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை

Added : மார் 25, 2020
Share

உசிலம்பட்டி: கருமாத்துார் - விக்கிரமங்கலம் இணைப்பு ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருமாத்துாரில் இருந்து வடக்குவாச்சி அம்மன் கோயில், ஜெகநாதபுரம், நரசிங்கபுரம், கண்ணபுரம், வழியாக விக்கிரமங்கலம் செல்லும் 11 கி.மீ., கொண்ட ரோடு சேதமடைந்துள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.ஜெகநாதபுரம் ஜெயச்சந்திரன்: இப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு வசதியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்புச்சாலை ஏற்படுத்தினர். இதில் கண்ணாபுரம் விலக்கு வரையிலான 4 கி.மீ., ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மேடும், பள்ளமாக உள்ளது.

மேலும், மதுரை - -போடி ரயில்பாதைக்கான தரைவழிப்பாலம் செங்குத்தாக உள்ளது. இதனால் பாலத்தை கடக்க சிரமமாக உள்ளது. இணைப்பு ரோட்டை புதுப்பித்தும், செங்குத்தான ரயில்வே பாலத்தை சரிப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X