கஞ்சமலையில் சாம்பலாகும் மரங்கள்; வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Added : மார் 25, 2020
Share
Advertisement

வீரபாண்டி: மர்ம நபர்கள் வைக்கும் தீயால், கஞ்சமலையிலுள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன.
சேலம் மாவட்டம், கஞ்சமலையில், அரிய மூலிகைகள், பாக்சைட் தாது, வற்றாத ஊற்றுகள் உள்ளன. அங்கு, ஆடு, மாடு மேய்ப்பவர், மலையேற்றம் செல்பவர்கள், சமூக விரோதிகள் சிலர், மது குடித்துவிட்டு, காலி பாட்டில்களை உடைத்து போட்டு வருகின்றனர். தடயங்களை மறைக்க, மலையில் தீ வைத்து விடுகின்றனர். கோடையில், அடிக்கடி நடக்கும் தீ விபத்தால், ஏராளமான மரங்கள், அரிய மூலிகைகள் எரிந்து சாம்பலாகின்றன. இரவில், மலையில் பற்றி எரியும் தீ, காற்றின் வேகத்தில் பரவி, மலையடிவாரத்தில் பரவும் போது, கஞ்சமலையை சுற்றியுள்ள குடியிருப்புகள், வயல்கள் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. அதேநேரம், மலை மேல் எரியும் தீயை அணைப்பதில் சிரமம் உள்ளதால், தீயணைப்பு படையினர், வனத்துறையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில், ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X