பொது செய்தி

தமிழ்நாடு

இயலாதவர்களுக்கு உதவ சென்னை மாநகராட்சி அழைப்பு

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இயலாதவர்கள், ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்கள் வழங்க, தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் தனியார்கள், சமூக நல ஆர்வலர்கள் சமைத்த உணவை நேரடியாக வழங்க வேண்டாம் எனவும், தங்களிடம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.



latest tamil news


கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, இன்று (மார்ச்-25) முதல் அமலுக்கு வந்ததுள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, தேவையான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சானிட்டரி நாப்கின், முக கவசம் ஆகியவற்றையும் ஜெ.ஜெ. விளையாட்டு அரங்கம், அண்ணா நகர், அம்மா அரங்கத்தில் கொடுக்கலாம். நேரடியாக யாரும் சமைத்த உணவை வழங்க வேண்டாம். ஏனெனில் கூட்ட நெரிசல் ஏற்படலாம். நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




தடை

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், அரிசி, கோதுமை போன்ற பொருட்களை மட்டும் டெலிவரி செய்ய அனுமதி அளித்தும், இன்று (மார்ச் 25) மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மார்-202018:59:31 IST Report Abuse
அசோக்ராஜ் 365 நாளும் லஞ்ச ஊழலில் மிதக்கும் மாநகராட்சி திடீர்னு ஒரு நாள் புத்தர் வேசம் கட்டுனா கேலிதான் செய்வாங்க. பின்னாலே வர மாட்டாங்க.
Rate this:
Cancel
25-மார்-202018:20:53 IST Report Abuse
ஆப்பு வெறும் நாள்ளியே அம்மா ஸ்டிக்கர், போட்டு எல்காம் வெச்சு அர்சியல் பண்ணவங்க. இன்னிக்கி கேக்கணுமா? இ.பி.எஸ் படத்தையும் சேத்துப் போடுவாய்ங்க.
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
25-மார்-202022:20:22 IST Report Abuse
Dubuk Uகொரோனா வந்தும் உனக்கு அம்மா பயம் போகலையா?...
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
25-மார்-202015:39:23 IST Report Abuse
தமிழ் மைந்தன் அறிவாலயம் இப்போ மாமூல் தொகையை கூட ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த தெரிவித்து உத்தரவு.......ஆனால் மாமூல் வசூலிக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இல்லையே.......
Rate this:
25-மார்-202019:13:16 IST Report Abuse
தமிழ் டேய் உனக்கும் அறிவாலயம் பத்தி பேசலைனா தூக்கமே வராதுபோல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X