பொது செய்தி

தமிழ்நாடு

9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Plus2, 1to9thStandard, AllPass, Examination, 9ம்_வகுப்பு, தேர்ச்சி, தேர்வுகள், ரத்து, முதல்வர், அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். மேலும், நேற்றைய (மார்ச் 25) பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வும், நடக்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 1 முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.


latest tamil news


இந்நிலையில் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: நேற்று (மார்ச் 24) நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்கள் மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும்வரை டீக்கடை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-மார்-202021:25:56 IST Report Abuse
R.Kumaresan எது CBSE,CBSC பள்ளிக்கூடம் எது Military campus/Police பள்ளிக்கூடம் என்று தெரியாமல் சில பள்ளிக்கூடங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் இயங்கிக்கொண்டிருக்கும்.. R.Kumaresan. 1முதல்9ம் வகுப்புவரை மாணவர்கள் தேர்ச்சி என்பது CBSE,CBSC உட்பட எல்லா பள்ளிக்கூடங்களுக்கும்தானே.. காங்கிரஸ் ஆட்சியில் 1முதல்8ம் வகுப்புவரை காலவரையின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று சொல்லிவிடுவார்கள்.. R.Kumaresan.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-மார்-202021:18:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாஸாக்கியதுலே நன்னாபடிக்கிற பிள்ளைகளுக்கு நோ ப்ராப்லம். பிலோ ஆவெரேஜ் மாணவர்களுக்கு தான் கஷ்டம் ப்ளீஸ் தயவு செய்த்துமுழுமுயற்சியுடன் படிச்சு படிப்பிலே தேர்ச்சி பெற முயற்சி பண்ணுங்கள் எல்லா மாணவர்களும் எல்லோரும் சிறந்த மாணவ மணிகளேதான்
Rate this:
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
25-மார்-202019:48:48 IST Report Abuse
M.P.MADASAMY சலுகை மழை பொழிகிறது.கொரோனாவே ஒவ்வொரு துறையிலும் உன் முகம் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X